வடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டும்; தென்கொரியா மற்றும் ஜப்பான் ஒப்புதல்

கொரியா பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது பொருளாதார நலன்களுக்குகாக ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திவருகிறது. அமெரிக்காவின் இந்த அக்கிரபிப்புக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் உதவி புரிந்து வருகின்றன எதனால் கொரியா பிராந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நங்கள் அணு ஆயுத சோதனை மேற்கொள்கிறோம் என்று வடகொரியா தெரிவித்தது. இதைத்தொடர்ந்து வடகொரியா பல முறை அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா. அமைப்பும் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில் வடகொரியாவின் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். வடகொரியா அமெரிக்காவின் அக்கிரபிப்பு இல்லாமல் கொரியா தீபகற்பம் இருக்க வேண்டும் ஆதலால் தென்கொரியா அமெரிக்காவுக்கு துணை புரிவதை நிறுத்த வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தது வந்தது. ஆனால் தென்கொரியா அமெரிக்காவுடன் இன்றும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்து கொண்டு அந்த பிராந்தியத்தில் பதட்டத்தை குறைக்க முயற்சி செய்தது.

இதற்காக நடந்த தொடக்க நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே சந்தித்து பேசினார். இதில் வடகொரியா விவகாரம் பற்றி பேசப்பட்டது என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய அபே, வடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதனை மூனிடம் உறுதி செய்த தகவலை வெளியிட்டார்.

இரண்டாம் உலக போரில் ஜப்பான் ராணுவத்தினரால் பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்களுக்கு பலனளிக்கும் வகையிலான முறையான ஒப்பந்தம் ஒன்றும் மாற்றம் செய்ய முடியாத முறையில் தென்கொரியாவுடன் இறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும் அபே கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top