அமெரிக்காவின் முடிவுகள் பூமிக்கு நீடித்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது: நடிகர் ராபர்ட் டி நீரோ விமர்சனம்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார் ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான ராபர்ட் டி நீரோ.

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் கரிய அமில வாயு போன்றவையை குறைத்து புவி வெப்பம் அடைவதை தடுக்க உலக நாடுகளால் உருவாக்கப்பட்டதாகும். 2017 ஜூன் மாதம் உலக நாடுகள் ஒன்று கூடும் ஜெனீவா சந்திப்பில், பூமியின் புவி வெப்பம் அதனுடைய உச்சத்தை அடைந்துள்ளது என்றும் இதனால் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம், வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படக்கூடும் இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து, ஜூன் 2017ல், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்தார். தொடர்ந்து சூழலியல் ஆர்வலர்களின் விமர்சனத்தை அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ துபாயில் நடைபெறும் பருவநிலை மாற்றம் பற்றிய 2018 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ துபாயில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் பற்றிய 2018 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் அவர் பேசுகையில்:-

பருவநிலை மாற்றம் பற்றிய எனது சொந்த நாடான அமெரிக்காவின் பார்வை அது முடிவு செய்துள்ள சூழல் சரியாக இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

வெப்பநிலை உயர்வை தடுக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டியுள்ளார். நவம்பர் 2016ல், பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் அரேபிய தேசம் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் என்றும், மேலும் வெப்பம் 2 டிகிரி செல்சியஸ் என்கிற அளவை தாண்டாமல் பார்த்துக் கொள்ள அவர்கள் உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

நான் என் சொந்த நாடான அமெரிக்காவை பற்றி பேசுகிறேன், நாங்கள் ஒரு ‘பின்தங்கிய நாடு’ என்று சொல்ல விரும்பவில்லை, ஆனால் நாங்கள் தற்காலிக பைத்தியக்காரத்தனமான வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

“உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு நமது பூமிக்கு நீடித்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பிடிவாதம் தான் காரணம் என்று விமர்சித்தார். இப்போது எனது நாட்டில் சூழல் வித்தியாசமாக இருக்கிறது. விரைவில் அதை சரி செய்வோம்” என்று ராபர்ட் டி நீரோ கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top