‘விஜய் -62’ மற்றும் ‘காலா’ படப்பிடிப்பு வீடியோ இனையத்தில் கசிவு: படக்குழுவினர் அதிர்ச்சி

பா.ரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் ‘விஜயின் 62’ படங்களின் படப்பிடிப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் கசிந்ததால், இரண்டு படக்குழுவினருமே கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தார் தயாரிப்பாளர் தனுஷ். அவர் அறிவித்த சில நாட்களிலேயே ‘காலா’ படப்பிடிப்பின் சண்டைக் காட்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி, வேகமாகப் பரவிவருகிறது.

இக்காட்சிகள் படப்பிடிப்பு நடைபெறும் போது மானிட்டரிலிருந்து காட்சிப்படுத்தியது போல் தெரிகிறது. அந்த வீடியோவில் ரஜினி, வில்லன் ஒருவரைத் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் ஃபோட்டோ ஷுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருட்டு தனமாக இணையத்தில் கசிந்தன. இதை சற்றும் எதிர்பாராத படக்குழு அதிர்ச்சி அடைந்தது. மேலும் இம்மாதிரியான தவறுகள் இனி நடக்காமல் இருப்பதற்காக படக்குழுவினர் கடும் கட்டுப்பாடுகளோடு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் நடத்தி வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு தளத்திலிருந்து 10 விநாடி காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. படப்பிடிப்பில் விஜய் நடித்த சண்டைக்காட்சியை மொட்டைமாடியிலிருந்து படமாக்கி இருக்கிறார்கள்.

இரண்டாவது முறையாக படப்பிடிப்பு காட்சிகள் திருத்தனமாக இணையத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவை மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இவ்விரண்டு முக்கிய படங்களின் காட்சிகள் கசிவால், தமிழ் திரையுலகம் கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்து படப்பிடிப்பு நடத்தினாலும், படப்பிடிப்பு தளத்தின் காட்சிகள் கசிவு என்பது பெரிய நடிகர்களின் படத்திற்கு பெரும் பின்னடைவாகும். படத்தின் மீதான ஈர்ப்பு இம்மாதிரியான செயல்களால் குறையக்கூடும் மேலும் இது படத்தின் வசூலை பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top