அணைத்து பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயம் – அவசர சட்டம் கொண்டு வருகிறது தெலுங்கானா அரசு

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் 1 முதல் 12ம் வகுப்பு வரை தெலுங்கு பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் அறிவித்திருந்தார். . இது தொடர்பாக அவரச சட்ட ஆணையம் விரைவில் தெலுங்கானா அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் என்று உலக தெலுங்கு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, தெலுங்கு பாடத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக போடி ஸ்ரீராமுலு மற்றும் தெலுங்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி சத்யநாராயண தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டுக்குள் முடிவு செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது.

அந்த குழு, தனது பரிந்துரையை அளித்துள்ளது. அதில் மாணவர்களுக்கு மூன்று நிலைகளில் தெலுங்கு பாடத்தை கற்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி பாடத்திட்டத்தில் தெலுங்கு சேர்க்கப்பட உள்ளது.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் ஐ.பி உள்ளிட்ட அனைத்து கல்வி வாரியங்களுக்கும் உட்பட்ட பள்ளிகளில் தெலுங்கு பாடத்தை கட்டாயமாக்க இந்த அவசர சட்டம் வகை செய்யும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் தெலுங்கு பாடத்தை கட்டாயமாக்குவது தொடர்பான அவசர சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top