மத்திய அரசின் புதிய வாடகை டெண்டரை எதிர்த்து கியாஸ் லாரிகள் ஸ்டிரைக் 2-வது நாளாக தொடர்கிறது

மத்திய அரசின் புதிய மாநில வாரியான லாரி வாடகை டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கியது. இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்கிறது.

தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் புதிய வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அறிவித்தது. மேலும் மண்டல வாரியாக நடத்தப்பட்ட டெண்டர் நடைமுறையில் மாற்றம் செய்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த புதிய டெண்டர் நடைமுறை மூலம் ஒரு வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதோ, அந்த மாநிலத்தில் நடைபெறும் டெண்டரில் தான் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள பாலா ஆயிரம் பேரின் வழக்கை பாதிக்கப்படும் என்று மத்திய அரசுக்கு எதிராக தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று முதல் கால வரையற்ற போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.

இதேபோல கிழக்கு மண்டலத்தை சேர்ந்த 4,300 ஆயிரம் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையளாளர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கி உள்ளனர்.

இதனால் இந்த மண்டலத்தில் உள்ள மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விரைவில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பேச்சு வார்த்தை மூலம் மத்திய அரசு சுமூக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென் மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:-

முன்பு போல மண்டலம் வாரியாக டெண்டரை அமல்படுத்த கோரி 2-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு ரூ. 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கிழக்கு மண்டலத்திலும் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாஸ் கொண்டு செல்லும் பணி நிறுத்தப்பட்டாலும், இன்னும் 5 நாட்களுக்கு பிறகே சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும். எனவே மத்திய அரசு எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும் என்றனர்.

அதன்படி, எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது.

இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

தென் மண்டலத்தில் உள்ள 47 பாட்டிலிங் மையங்களில் இன்னும் 5 முதல் 7 நாட்கள் வரை எரிவாயு இருப்பு உள்ளது. இங்கு சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் தொடர்ந்து நடக்கிறது. 10 நாட்களுக்கு பிறகு கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top