சிறு கண் அசைவால் பார்ப்பவர்களின் மனதையே கரைக்கும் ப்ரியா வாரியர்; இணையத்தை கலக்கும் வீடியோ

தென் இந்தியாவையே தற்போது திருப்பி போட்டு இருக்கும் ஒரு பெயர் எதுவென்றால் அது பிரியா வாரியர்.

சமீப காலமாகவே கேரள படங்களுக்கும், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இன்றி தென் இந்தியா சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ப்ரேமம் மலர் கதாபாத்திரட்கில் நடித்த சாய் பல்லவி, ஜிமிக்கி கம்மல் ஷெரில் என்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்தனர்.

இவர்களின் வரிசையில் தற்போது டிரெண்டாகி வருகிறார் ப்ரியா வாரியர். 18 வயதான இவர், கேரளாவின் திரிசூர் விமலா கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். பிரியா ஒரு மோஹினியாட்ட நடனம் என்று கூறப்படும் நடனத்தில் கைதேர்ந்தவர், இது அவரது Instagram கணக்கில் உள்ள படங்களிலிருந்து மிகவும் தெளிவாக காணலாம், இது அவருடைய மாடலிங் மற்றும் நடிப்பு வாழ்க்கையிலிருந்து அவரின் சில அற்புதமான திறமைகளை காட்டுகிறது.

மலையாளத்தில் `ஹேப்பி வெட்டிங்’, `சங்ஃஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது `ஒரு அடாரு லவ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெறாத நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ பாடல் ஒன்றை கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது.

`மாணிக்ய மலராய பூவி’ என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்கின்றனர். அப்போது, தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் ப்ரியாவின் பார்வை தான் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

அந்த பாடலில் அவர் தன் காதலை வெளிப்படுத்திய முகபாவனை மற்றும் நடிப்பு, தனது ஒரு பார்வையால் பார்ப்பவர்கள் மனதையே கரைத்து விடுகிறார். இவரது வீடியோ தான் தற்போது எல்லோராலும் பார்த்து ரசித்து வரப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ப்ரியா வாரியருக்கென தற்போது ஒரு ரசிகர் படையும் உருவாகியிருக்கிறது.

3 நாட்களில் இந்த வீடியோவை யூடியூப்பில் சுமார் 48 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேலானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். யூடியூப் டிரெண்டிங்கில் இந்த பாடல் முதலிடத்தில் உள்ளது. பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அந்த காட்சியில் வரும் ப்ரியா வாரியரை 3 நாட்களில் 17 ஆயிரம் பேர் பின்பற்ற ஆரம்பத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top