தேர்தலை மனதில் வைத்து ரெயில்வேயில் 1 லட்சம் பேருக்கு வேலை; பாஜக திட்டம்

 

பா.ஜனதா ஆட்சியில் வேலை வாய்ப்புகள் சரியாக வழங்கப்படவில்லை.சமீபத்தில் பிரதமர் மோடி வேலையில்லாத பட்டதாரிகள் பக்கடா விற்று பிழைப்பு நடத்தலாம் அதுவும் ஒரு தொழில்தான் என்றார்

 

இந்த நிலையில் காங்கிரஸ் பாஜகவை வேலையில்லா நிலையை உருவாக்கியவர்  என்று குற்றம்சாட்டி வருகிறது.

 

இது போன்ற விமர்ச்சனங்களிலிருந்து விடுபட பாஜக ஒரு திட்டம் தீட்டி இருக்கிறது பாராளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் பல்வேறு துறைகளிலும் காலி பணியிடங்களை நிரப்புவதோடு, புதிய பணியிடங்களையும் உருவாக்கி வேலைவாய்ப்பு வழங்க மோடி அதிரடி திட்டங்களை வகுத்துள்ளார்.

 

அதன் அடிப்படையில் முதல் முதலில் ரெயில்வே துறையில் ஏராளமான வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

குரூப் -டி பிரிவில் 63 ஆயிரம் பேரும், லோகோ பைலட், தொழில்நுட்ப பிரிவில் 26 ஆயிரம் பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரெயில்வே தேர்வு வாரியம் மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வழக்கமாக ஆயிரக்கணக்கில் தேர்வு செய்வார்கள். ஆனால் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை.

 

இதற்கான அறிவிப்பை ரெயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. குரூப்-டி பிரிவுக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி வரையும், லோகோ பைலட் பணி இடங்களுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி வரையும் விண்ணப்பிக்கலாம்.

 

ஆன்-லைன் மூலம், விண்ணப்பிக்க வேண்டும். தேர்வும் ஆன்-லைன் மூலம் நடைபெறும். வருகிற மே மாதத்துக்குள் ஒரு லட்சம் பேரையும் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top