கீப்பரை பார்த்து கிரிக்கெட் விளையாடுகிறார் மோடி- கர்நாடகாவில் ராகுல் கிண்டல்

 

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது போலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் பாரதியஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இப்போதே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.

ஏற்கனவே பிரமர் நரேந்திரமோடி கர்நாடகாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று கர்நாடகாவில் 2 இடங்களில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

கராத்தகி, சிந்தானூர் ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் இப்போது அவர் செய்யப்போவதைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். செய்ததைப் பற்றி எதையும் சொல்லமுடியவில்லை. அவர் ஆட்சி காலத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும்.

அவர் உபதேசம் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால் செயல்திறனில் ஒன்றும் இல்லை. கிரிக்கெட்டில் வீசப்படும் பந்தை நோக்கி ஆடினால் தான் ரன் எடுக்க முடியும். விக்கெட் கீப்பரை நோக்கி நின்று கொண்டிருந்தால் பந்து வருவது தெரியாது,
சச்சின் தெண்டுல்கர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் விக்கெட் கீப்பரை பார்த்து நின்று ஆடியிருந்தால் ஒரு ரன் கூட எடுத்திருக்க மாட்டார்.

ஆனால் பிரதமர் மோடி பந்தை பார்த்து ஆடாமல் விக்கெட் கீப்பரை பார்த்து ஆடிக்கொண்டிருக்கிறார். அப்படியானால் எப்படி ரன் எடுக்க முடியும்?

மோடி ஆட்சியில் எந்த வேலை வாய்ப்பு திட்டத்தையும் உருவாக்கவில்லை. வேலையில்லாத வளர்ச்சிதான் அதிகரித்துள்ளது. விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தள்ளப்பட்டுள்ளனர். சமதர்ம சமுதாய நிலை இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நெருக்கடியை போக்க உடனடியாக தேசிய வங்கிகளில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவேண்டும். தொழிலதிபர்கள் கோரிக்கை வைத்த 24 மணி நேரத்தில் ரூ.1½ லட்சம் கோடியை பிரதமர் தள்ளுபடி செய்திருக்கிறார்.

ஆனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யமுடியவில்லை. பிரதமர் உடனடியாக இந்த வி‌ஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top