இன்று தொடங்குகிறது மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வெள்ளிக்கிழமை (9.02.2017) வெளியிடப்பட்டது.

‘காற்று வெளியிடை’ படத்தை அடுத்து தனது அடுத்த படத்தை மணிரத்தினம் அறிவித்துள்ளார். இந்த படத்திற்காக பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்படத்தில், அரவிந்த் சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top