சிரியா பகுதியில் துருக்கி நாட்டு ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர் குர்திஷ் படையினர்

சிரியாவில் உள்ள எண்ணெய் வளங்களுக்காக அந்த பகுதியை தொடர்ந்து பல நாடுகள் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா, துருக்கி மற்றும் ரஷ்யா என பல நாடுகள் அங்கு உள்ள எண்ணெய் வளத்திற்க்காக அங்கு போரை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும், பல லட்ச கணக்கானோர் அகதிகளாக வெளியேறியுள்ளார்.

இன்னும் இந்த போர் முடிவு பெறாமல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் மக்களை மேலும் கொன்று குவித்து வருகின்றன. சர்வதேச நாடுகளின் போர் தாக்குதல் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து அங்கு கிளர்ச்சி படைகள் போராடி வருகின்றன.

உள்நாட்டுப் போராலும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தாலும் நிலைகுலைந்து கிடக்கும் சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் மற்றும் அருகாமையில் உள்ள மாகாணங்களையொட்டிய தங்கள் நாட்டு எல்லைப்பகுதியில் 12 கண்காணிப்பு முகாம்களை துருக்கி அரசு அமைத்துள்ளது.

துருக்கி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் இங்கிருந்து புறப்பட்டு சென்று சிரியா அதிபரின் ஆட்சியை எதிர்த்துப் போராடிவரும் குர்திஷ் போராளிகள்மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், சிரியாவின் வடபகுதியில் உள்ள ஆப்ரின் நகரில் உள்ள போராளிகள் முகாம்கள் மீது நேற்று துருக்கி நடத்திய வான்வழி தாக்குதல்களில் 39 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின்போது துருக்கி நாட்டுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டரை குர்திஷ் படையினர் சுட்டு வீழ்த்தினார், இதில் இரு விமானிகள் உயிரிழந்ததாகவும் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல் நகரில் தனது கட்சியினரிடையே இந்த தகவலை நேற்று தெரிவித்த எர்டோகன், ‘நாம் போரில் இருப்பதால் இதுபோன்ற இழப்புகள் எல்லாம் ஏற்படும். ஒரு ஹெலிகாப்டரை நாம் இழந்திருக்கலாம். ஆனால், இதற்கான விலையை அவர்கள் தர வேண்டி இருக்கும்’ என்று குறிப்பிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top