தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றுமா?

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்காவிடம் இழந்தது.

இதனை தொடர்ந்து, 6 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றி பெற்றது. ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த 4-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் நாளை (13-ந்தேதி) நடக்கிறது. இந்திய அணி நாளைய ஆட்டத்தில் வென்று தென்ஆப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று படைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமானதாக இருந்தது மேலும் மழையால் வெற்றி தோல்வியை தழுவ நேரிட்டது.

கடைசி போட்டி வரை சென்று நெருக்கடி ஏற்படுவதை தவிர்த்து 5-வது ஆட்டத்திலேயே வெற்றி பெற இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. இரு அணிகளும் நாளை மோதுவது 82-வது போட்டியாகும். இதுவரை நடந்த 81 போட்டியில் இந்தியா 32-ல், தென்ஆப்பிரிக்கா 46-ல் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டி முடிவு இல்லை.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. மேலும், ஒருநாள் தொடரில் இந்தியாவின் பலமே சுழற்பந்து வீச்சு தான். யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் மிகவும் சிறப்பான முறையில் பந்துவீசி வருகிறார்கள். இருவரும் இணைந்து 4 ஆட்டத்தில் 24 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இருவரும் தலா 12 விக்கெட் எடுத்துள்ளனர். இந்திய அணி பீல்டிங்கில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது கடந்த போட்டியில் தெளிவாக தெரிந்தது.

தொடரை இழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா அணிக்கு நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமே. கடந்த போட்டியில் மில்லர், புதுமுக வீரர் கிளாசன் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினர்.

இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய போட்டி பகல்-இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top