தமிழக எல்லைக்குள் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களை விரட்டியது இலங்கை கடற்படை;வேடிக்கை பார்க்கிறது இந்தியஅரசு

 

 

கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் மீன் பிடித்திக்கொண்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியுள்ளனர்.

 

ராமேஷ்வரம் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் 460 இயந்திர படகுகளுடன் கச்சத்தீவு அருகே இந்திய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வலை விரித்து மீன்கள் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்துப்படகில் வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் மீனவர்களை வலைகளை எடுக்குமாறு கூறியுள்ளனர்.

 

இதனையடுத்து, அங்கிருந்து படகுகளை எடுத்துக்கொண்டு கிளம்புமாறு இலங்கை அதிகாரிகள் விரட்டியதோடு, பத்து வலைகளை எடுத்துக்கொண்டதாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். கடந்த 8-ம் தேதி இதே பகுதியில் மீன்கள் பிடித்துக்கொண்டிருந்த 7 மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top