கண்ணாடியில் பின்பக்கத்தை மட்டும் பார்த்தபடி வாகனம் ஓட்டுகிறார் மோடி – ராகுல்

 

கர்நாடகாவில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி பின் பக்க கண்ணாடியை பார்த்தவாறு வாகனத்தை ஓட்டுவதாக கூறினார்.

 

வரும் மே மாதத்துக்குள் கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய ஆட்சியை தக்கவைத்துகொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரம் காட்டி வருகின்றன.

 

இந்நிலையில், லிங்காயத் இனத்தவர்கள் அதிகமாக வாழும் கர்நாடக மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் இன்றுமுதல் 13-ம் தேதிவரை தொடர்ந்து 4 நாட்கள்  ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்கிறார். பெல்லாரி, ராய்ச்சூர் மற்றும் குல்பர்கா மாவட்டங்களில் ’ஜன ஆசீர்வாத்’ என்ற பெயரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

 

முதல்கட்டமாக, இன்று பிற்பகல் பல்லாரி மாவட்டத்துக்குட்பட்ட ஹோசபேட் பகுதியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.

 

அப்போது அவர் பேசுகையில், கடந்தகாலம் பற்றி பேசுவதற்காக மட்டும் நீங்கள் (மோடி) நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கவில்லை. உங்களது எதிர்கால திட்டங்கள் குறித்து நாட்டுக்கு தெரியபடுத்த வேண்டும். மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவது பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும். சித்தராமையா வாகனத்தை ஓட்டும்போது நேராக பார்த்த ஓட்டுகிறார். ஆனால் பிரதமர் மோடியோ, பின் பக்க கண்ணாடியை பார்த்தவாறு வாகனத்தை ஓட்டுகிறார். இது அதிக விபத்துகளை ஏற்படுத்தும். பின் பக்க கண்ணாடியை பார்த்து ஓட்டுபவர்களால் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது, என கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top