ரபேல் விமான ஊழல், பாஜகவிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது – மோடி மீது ராகுல் காந்தி தாக்கு

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வாய் திறக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார், பாஜகவிடம் இருந்து எந்த உண்மையையும் எதிர்பார்க்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அக்கட்சித் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளனர். ஆளும் கட்சியான காங்கிரஸும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெல்லாரியில் முதல்கட்ட பிரச்சாரத்தை நேற்று
தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு ரபேல் போர் விமான பிரச்சினை நாட்டின் மிகப்பெரிய ஊழல் பிரச்சினையாக உள்ளது. பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு அவர் தனிப்பட்ட முறையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மாற்றினார்.

முதலில் ரபேல் போர் விமான ஒப்பந்தம், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் என்ற ராணுவ பொதுத்துறை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதுதான் இந்திய விமானப்படைக்கு கடந்த 70 ஆண்டுகளாக விமானங்களை கட்டமைத்து வழங்கியது.

ஆனால் மோடி, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெங்களூருவில் இருந்தும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் பறித்து, வெளிநாடுகளுக்கு கொடுத்து விட்டார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மோடி ஒரு மணி நேரம் பேசினார். ஆனால் அவர் ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

பிரதமர் மோடி செயல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகவில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக கூறியுள்ளார்.

மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவது பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும். சித்தராமையா வாகனத்தை ஓட்டும்போது நேராக பார்த்த ஓட்டுகிறார். ஆனால் பிரதமர் மோடியோ, பின் பக்க கண்ணாடியை பார்த்தவாறு வாகனத்தை ஓட்டுகிறார். வேலைவாய்ப்பை உருவாக்குது, விவசாயிகள் பிரச்சினை என காங்கிரஸின் எந்த ஒரு கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை.

ஆனால் பாஜக தொடர்ந்து மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறது. அந்த கட்சியிடம் இரந்து உண்மையை எதிர்பார்க்க முடியாது.

தேர்தலின்போது மக்களுக்கு வாக்களித்தபடி, பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய கூட்டணி அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர தவறி விட்டது.

மோடி ஊழல் பற்றி பேசுகிறார். ஆனால் இந்த மாநிலத்தில், ஊழலில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு சாதனை படைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top