பிப்ரவரி 12-ந்தேதி முதல் கியாஸ் டேங்கர் லாரிகள் ‘ஸ்டிரைக்’; சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் முறை முன்பு மண்டல வாரியாக டெண்டர் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தந்த மாநிலங்களில் புதியதாக டெண்டர் நடத்தப்படும் என்றும், அதில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெண்டர் தொடர்பான புதிய அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் வேலைநிறுத்தம் செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், இதில் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு பழைய முறைப்படி டெண்டர் விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 12-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

இதனால் கேஸ்சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top