அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினர் நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம்: சிரியா அரசு குற்றச்சாட்டு

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் சிரிய அரசு ஆதரவு படையை சேர்ந்த சுமார் 100 வீரர்கள் உயிரிழந்தனர்.

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இதற்கிடையே, நேற்று குஷாம் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா கூட்டுப் படையின் முகாம்களை குறிவைத்து சுமார் 500 அரசுக் ஆதரவு படையினர் துப்பாக்கி, வெடிகுண்டு மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அமெரிக்கா கூட்டுப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமெரிக்கா தலைமையிலான இந்த கூட்டுப் படையினர் சிரியா அதிபரின் ஆதரவு படையினருக்கு எதிராக நடத்திய தாக்குதலில் 100 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த படுகொலையை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும். அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினர் நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம் என்று சிரியா அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிரியா நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையை சட்டவிரோதம் என்றும், அதனை கலைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top