ஆண்டாள் விவகாரம்; தந்தைப்பெரியார் திராவிடக்கழகம் ஜீயருக்கு எதிராக உண்ணும் விரதம்!

 

 

சினிமா பாடலாசிரியர் வைரமுத்து சென்னை பல்கலைக்கழகத்தில் 1917 ஆம் ஆண்டு டிசம்பர் 17, 18 தேதிகளில் டி.ஏ.கோபிநாத் ராவ் என்ற தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர் நிகழ்த்திய சொற்பொழிவின் கட்டுரைத்  தொகுப்பை அடிப்படையாக வைத்து  எம்.ஜி.எஸ்.நாராயணன் 1978-ல் எழுதிய கட்டுரையிலிருந்து சில தகவல்களை வைத்துக்கொண்டு ஆண்டாள் பற்றி தினமணியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்

 

ஆண்டாளைப்பற்றி  அவதூறாக பேசியதாகவும் எழுதியதாகவும் வைரமுத்து மீது பாஜக தலைமை பொறுப்பில் இருக்கும் எச் ராஜா  குற்றச்சாட்டு வைத்தார்

 

அதோடு நின்று விடாமல் வைரமுத்துவை மிகவும் கேவலமான, தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி அவருக்கு கொலைமிரட்டலும் விட்டார்.அதன்பிறகு   பல்வேறு இந்து அமைப்புகள் மத்தியிலும் வைரமுத்துக்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியது.

 

இவ்விவகாரத்தில், வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென, ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் சடகோபராமானுஜர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர், ஒரே நாளில் உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்ட அவர் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக எச்சரித்தார். அதன்படி நேற்று (பிப்.8) உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று அவர் 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

திடீர், திடீரென ஜீயர் உண்ணாவிரதம் இருப்பது கேலிக்குரிய விசயமாக சமூகவலைத்தளமேங்கும் பேசப்பட்டு வருகிறது. பாஜகவின் மேல்மட்ட தலைவரும் இதை ஒரு பிரச்சனையாக ஆக்கியவரும்  எச் ராஜாவே நிறுத்தச்சொல்லிய பிறகும் ஜீயர் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.

 

இந்த நிலையில்  , ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் சடகோபராமானுஜரின்  உண்ணாவிரதத்தை எதிர்த்தும்   ஜீயரைக் கண்டித்தும் தந்தைப்பெரியார் திராவிடக்கழகம் கோவையில் உண்ணும் விரதத்தை ஏற்படுத்தினார்கள். நேற்று சென்னையிலும் உண்ணும் விரதப்போராட்டம் தொடங்கியது

 

சமூகவலைத்தளங்களில் இன்று ஜீயர்தான் ட்ரென்ட்டாக இருக்கிறார். அது ஏனோ அவருக்கு தெரியவில்லை!

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top