‘சவரக்கத்தி’ படத்தில் நடிக்க நான் ஏன் ஒப்புக்கொண்டேன்?- ராம் விளக்கம்

‘சவரக்கத்தி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பதற்கு இயக்குநர் ராம் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் ராம் மற்றும் மிஸ்க்கின், மற்றும் நடிகை பூர்ண நடிப்பில் அறிமுக இயக்குனர் ஆதித்ய இயக்கி வெளிவந்து இருக்கும் படம் “சவரகத்தி”. இந்த படத்தை மிஸ்க்கின் தயாரித்துள்ளார், இப்படத்திற்கு அருள் கொரேலி இசைமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடித்து இருக்கும் இயக்குனர் ராம் அவர்களுக்கு இது நடிகராக இரண்டாவது படம் மாகும். இதற்கு முன் அவர் இயக்கி நடித்த தங்கமீன்கள் படம் மக்களிடையே பெரும் பரட்டை பெற்றது. தந்தை மகள் பாசஉறவை வெளிப்படுத்தும் அந்த கதையில் ராம் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர்.

இருந்தும் அந்த படத்தில் அவர்க்கு நடிக்க விருப்பம் இல்லை என்ற போதிலும் தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்காக அந்த படத்தில் நடித்தார். அதன் பின்னர் தற்போது சவரகத்தி படத்தில் நடித்து இருக்கிறார்.

இது தொடர்பாக இயக்குநர் ராம் கூறுகையில், ” ‘தங்க மீன்கள்’ படத்திற்குப் பிறகு ‘சவரக்கத்தி’ படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை இயக்குநர் ஆதித்யா அணுகினார். இப்படத்தில் காமெடி அதிகமாக இருக்கும். எனக்கும் காமெடிக்கும் ரொம்ப தொலைவு இருந்தாலும், இப்படத்தில் ‘பார்பர்’ கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இப்படத்தில் ஹீரோ, வில்லன் என்று என்பது இல்லை. இப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அருள் கொரேலி மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயாக சவாலான கதாபாத்திரத்தில் பூர்ணா நடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top