வாழ்த்தும் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது: நன்றி தெரிவித்த இளையராஜா

குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.

நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து நாட்டின் பல திசைகளில் இருந்து இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று நன்றி அறிவிப்பாக இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்றுவரை என்னை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில் துறையினர், ஊடகத் துறையினர் அனைவருக்கும் நன்றி. விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வாழ்த்தும், அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தைத் தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது. ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும், மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டு இருப்பேன்.

இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top