‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு ‘விசுவாசம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
‘விவேகம்’ படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. அஜித் ரசிகர்களே இந்த படத்திற்கான நல்ல விமர்சனங்களை தெரிவிக்கவில்லை. இருந்தும் அஜித் என்னும் ஒரு தனி மனிதருக்காக படம் வெற்றிபெற்றது.
இதை தொடர்ந்து, சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கும் படம் ‘விசுவாசம்’. அஜித்து – சிவா இணையும் 4-வது படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், படத்தின் வில்லன், மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு வெளியிடாமல் இருந்தது.
‘விசுவாசம்’ படத்திற்காக இயக்குநர் சிவா – யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகினார். இதனால் இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது.
பின்னர் அனிருத், சாம்.சி.எஸ் உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டன.
இந்நிலையில் இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். `டிக் டிக் டிக்’ பட இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் இமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. 2018 தீபாவளிக்கு ‘விசுவாசம்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.