பாராளுமன்றத் தேர்தலில் பாஜ.க.வை தோற்கடிக்க தயாராகுங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சோனியா

பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் காங்கிரஸ் எம்பிக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். ராகுல் காந்தி எனக்கும் தலைவரே. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் முன்பு இருந்த அதே அர்ப்பணிப்புடன் ராகுல் காந்தியுடன் இணைந்து பணியாற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆட்சியில் நீதித்துறை, ஊடக மற்றும் சிவில் சமூகம் என அனைத்தும் திட்டமிட்ட தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

காங்கிரஸின் எழுச்சிக்கு எடுத்துக்காட்டாக கர்நாடக தேர்தலை எதிர்பார்க்கிறேன். ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் பாஜ.க.வை தோற்கடிக்க கட்சியின் தலைவர் ராகுலுடன் இணைந்து செயல்படுவேன்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top