ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு அளக்கப்படுவதும் என தொடர்ந்து இலங்கை கடற்படை அத்துமீறிவருகின்றது.

நேற்று முன்தினம் ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினரால் தாக்கி விரட்டியடிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் நேற்றும் நடந்திருப்பது மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி பணியில் ஈடுபட்டபோது அங்கு குட்டி ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் இது எங்கள் எல்லை. இங்கு மீன் பிடிக்கக்கூடாது என மிரட்டியுள்ளனர்.

பின் திடீரென அவர்கள் படகுகளில் ஏறி மீனவர்களை சரமாரியாக தக்க தொடங்கினர் இதில் 50 பேர் காயம் அடைந்தனர். மேலும் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர்.

தொடர்ந்து இந்தப்பகுதியில் மீன் பிடிக்க வந்தால் சிறைபிடிக்கப்படுவீர்கள் என இலங்கை கடற்படையினர் மிரட்டினர். இதைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

மேலும் படகில் இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த நாகராஜ், ஆறுமுகம், ரவி, மற்றொரு நாகராஜ், எமரிட், கார்த்திக், வரகுண பாண்டியன், ஆகிய 7 மீனவர்களையும் சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை தலைமன்னார் துறைமுகம் கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வருவதால் எங்களால் மீன்பிடி தொழிலை செய்ய முடியவில்லை. மேலும் எங்கள் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை கடலுக்கு சென்றாலே எங்களை தாக்குவதும் சிறைபிடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top