3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய கேப்டன் விராட் கோஹ்லி சதம்; அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய கேப்டன் கோலி 39 ஓவர் முடிவில் 99 ரன்களுடன் இருந்த நிலையில் 39.1வது ஓவரில் 2 ரன்கள் எடுத்து சதம் கடந்துள்ளார். 119 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அவர் எடுத்துள்ள 34வது சதம் இது ஆகும். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் கோலி இந்த சதத்தின் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.

அட்டா நேர முடிவில் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 308 ரன்கள் குவித்துள்ளது. அடுத்து தென் ஆப்பிரிக்கா அணி அடவுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top