முதல்முறையாக தென் கொரியாவுக்கு செல்லும் வடகொரியா அதிபர் கிம்மின் சகோதரி

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் முதல் முறையாக தென் கொரியாவுக்கு செல்ல இருக்கிறார். இந்த சந்திப்பு கிழக்குஆசிய பிராந்திய நாடுகளிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் இந்த வாரம் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் முக்கிய உறுப்பினராக கிம் யோ ஜாங் பங்கேற்கிறார். இவரின் பயணத்தை வடகொரியா அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொரியா தீபகற்பத்தை பொருளாதார ரீதியாக கைப்பற்ற தொடர்ந்து அமெரிக்கா ராணுவ அக்கிரமைப்பு நடத்திவருவதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துவந்தது. அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புக்கு தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் உதவுகின்றன என்று வடகொரியா தெரிவித்து வந்தது.

மேலும், வடகொரியா தொடர் ஆணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவையும் அதன் ஆதரவு நாடுகளையும் எச்சரித்து வந்தது. தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் கடந்த இரு ஆண்டுகளாக மோதல் போக்கு வலுத்து வந்தது. வடகொரியாவின் செயல்களை முடிவுக்குக் கொண்டுவர தென் கொரியா அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் நாடும் பங்கேற்க விரும்புவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த புத்தாண்டு தினத்தில் அறிவித்தார். இது, தென் கொரியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதற்காக வடகொரியா சார்பில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த குழு நாளை மறுநாள் தென்கொரியா நாட்டுக்கு சுற்று பயணம் மேற்கொள்கிறது. இதன் உறுப்பினர்களில் ஒருவராக உள்ள அதிபரின் சகோதரியான கிம் யோ ஜாங் இதற்காக தென் கொரியா செல்கிறார். இதனை கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் தங்கள் நாட்டு அதிகாரிகளை அனுப்பத் தயாராக உள்ளதாக வடகொரியா கூறியது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் வெள்ளைக் கொடி காட்டப்பட்டது.

கிம் யோ ஜாங்கின் தென்கொரிய பயணம் வடகொரியா – தென் கொரிய உறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top