சங்கரை பின்னுக்கு தள்ளிய பா.இரஞ்சித்; ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறதா ‘காலா’?

இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் – பா.இரஞ்சித் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.

‘காலா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. இதில் ரஜினி மட்டும் கடைசியாக டப்பிங் பேசி முடித்தார். தற்போது இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மறுபக்கம் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இழுபறியில் இருப்பதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘காலா’ படத்தை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘காலா’ படத்தை லைகா நிறுவனம் வாங்கி தமிழகத்தில் ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top