இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என அழைப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வேண்டும்: ஓவைசி

இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என்று அழைப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க கூடிய வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று ஓவைசி கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதின் ஓவைசி ஒருசில கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

ஓவைசி கூறுகையில், “ இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என அழைப்பதை தண்டிக்க கூடிய குற்றமாக்க வேண்டும். இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என அழைப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க கூடிய வகையில் சட்டம் இயற்ற வேண்டும். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இது போன்ற மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்போவது இல்லை.

பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள முத்தலாக் மசோதா பெண்களுக்கு எதிரானது. இது எந்த வகையிலும் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்காது. பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமையால் இறந்தவர்கள், பெண்கள் மீதான மற்ற வன்முறைகள் அனைத்திற்கும் இந்த நடைமுறைகளை பயன்படுத்தி கடந்த காலங்களில் குறிப்பிட்ட சட்டங்கள் ஏற்றப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீதான வன்முறை நிறுத்தப்படவில்லை. மத்திய அரசின் இந்த முத்தலாக் மசோதா முஸ்லீம் சமூகத்தின் ஆண்களை சிறைக்கு அனுப்பும் சதி. ” இவ்வாறு தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top