ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு, 50 பேர் காயம்: இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது 2 ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்தப்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது. உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று மீனவர்களை மிரட்டினார். பின் திடீரென அவர்கள் படகுகளில் ஏறி மீனவர்களை சரமாரியாக தக்க தொடங்கினர் இதில் 50 பேர் காயம் அடைந்தனர். மேலும் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர்.

தொடர்ந்து இந்தப்பகுதியில் மீன் பிடிக்க வந்தால் சிறைபிடிக்கப்படுவீர்கள் என இலங்கை கடற்படையினர் மிரட்டினர். இதைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வருவதால் எங்களால் மீன்பிடி தொழிலை செய்ய முடியவில்லை. மேலும் எங்கள் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை கடலுக்கு சென்றாலே எங்களை தாக்குவதும் சிறைபிடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top