உ.பி.யில் 33 பேருக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்று; செலவை குறைக்க அனைவருக்கும் ஒரே ஊசி

 

மோடிக்கு பிறகு அல்லது மோடிக்கு பதிலாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகியை திட்டமிட்டு பாஜக வின் தலைவராக்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது.அதற்காக யோகியின் ஆட்சியை பத்திரிகையில் புகழ்ந்து எழுதுவது.உண்மைக்கு மாறாக அவர் வல்லவர் திறமையானவர் என்று பிரச்சாரம் செய்வது ஆர்.எஸ்.எஸ் சின் வாடிக்கையாகி விட்டது.ஆனால் உண்மையில் அவரது ஆட்சியில்  உத்தரப்பிரதேசம் மாநிலம் மிகவும் பின் தங்கிய மாநிலமாகவும் மிக மோசமான சுகாதாரத்தைக்கொண்ட மாநிலமாகவும் உள்ளது

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் அதிகளவில்  எச்.ஐ.வி பாதிப்பு புகார்கள் எழுந்த நிலையில், அம்மாநில  சுகாதாரத்துறை சமீபத்தில் இருநபர்கள் கொண்ட கமிட்டியை பிரேம்கஞ்ச், சாகிம்ர்புர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ய அனுப்பியது.

அந்த கமிட்டி 566 பேரை பரிசோதனை செய்ததில் தற்போது வரை 33 பேர் எச்.ஐ.வி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மிக குறுகிய காலத்தில் இத்தனை பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.

அங்குள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் ராஜேந்திர குமார் என்பவர் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி ஊசி போட்டுள்ளார். செலவை குறைக்கும் விதமாக அவர் இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிடிபட்டுள்ள ராஜேந்திர குமார் முறையாக மருத்துவம் படித்தவர் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் கான்பூரில் உயர்சிகிச்சை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில சுகாதார துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. Binary options: The shortest route to the world of trading. $ 153 635 Paid to our traders yesterday. Register now and get 10.000 virtual FUNDS in case of right forecast! This is FREE! далее здесь mfhw7.tk

Your email address will not be published.

Scroll To Top