‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ சர்ச்சை: வடிவேல் மீது காவல்துறையில் புகார் அளிக்க படக்குழு திட்டம்

வடிவேலு நடிப்பில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் சிம்புதேவன் இந்த படத்திற்கான இரண்டம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார்.

இந்த பாகத்தின் பெயர் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்று முடிவு செய்யப்பட்டது.

முதல் பாகத்தின் வெற்றி காரணமாக, வடிவேலுவே இந்த இரண்டம் பாகத்திலும் நடிக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தை ஷங்கர் தயாரிக்க ஒப்புக்கொண்டார். ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ முதல் பாகமும் இவர் தயாரிப்பில் வெளிவந்தது தான்

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. ஆனால், பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே இல்லை.

இதனால், தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் இருந்து படக்குழுவினரிடம் எந்த ஒரு பதிலுமே சொல்ல முடியாத சூழலில் உள்ளார்கள். இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, விரைவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்கள்.

இதன் படப்பிடிப்பிற்காக போடப்பட்டுள்ள அரங்குகளும் அப்படியே இருப்பதால், தினமும் படக்குழுவினருக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இது குறித்து விசாரித்தபோது, “வடிவேலுக்கு என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. அவர் வந்து விளக்கமளித்தால் தானே ஒரு முடிவுக்கு வர முடியும். ஒரு முன்னணி காமெடி நடிகர் இப்படியெல்லாம் செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது எனத் தெரியவில்லை. எங்கள் நோக்கம் அவர் மீது புகார் அளிப்பது அல்ல. விரைவில் வடிவேலு படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று வேதனையுடன் தெரிவித்தார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top