பஸ் கட்டண உயர்வை கண்டித்து 13-ந்தேதி அணைத்து மாவட்டங்களிலும் கண்டன கூட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக, அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த அணைத்து கட்சி கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது குறித்து திமுக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கூட்டம் முடிந்ததும் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் 13-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் . சிறையில் உள்ள மாணவர்கள், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராடி கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top