ராஜஸ்தான் இடைத்தேர்தல் பா.ஜனதா படுதோல்வி; ஆட்சியில் உள்ள வசுந்தராவை நீக்கக்கோரி போர்க்கொடி

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி காங்கிரஸிடம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

ஆல்வன் எம்.பி. தொகுதியில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 496 வாக்குகள் வித்தியாசத்திலும், அஜ்மீர் எம்.பி. தொகுதியில் 88,144 ஓட்டுகள் வித்தியாசத்திலும், மண்டல்கர் எம்.எல்.ஏ. தொகுதியில் 12,976 ஓட்டுகள் வித்தியாசத்திலும் தோற்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் இடைத்தேர்தல் தோல்வி பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை தழுவிய நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. இப்போது பாரதீய ஜனதாவிலும் அக்கோரிக்கையானது எழுந்து உள்ளது.

மத்திய மந்திரி ராஜேந்தர ரத்கோஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

இதற்கிடையே இடைத் தேர்தல் தோல்வி தொடர்பாக முதல்- மந்திரி வசுந்தரா பதவி விலக வேண்டும் என்று ராஜஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ்வர்ருடி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. மாநிலத்தில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகிறது. தோல்விக்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் முதல்- மந்திரி பதவி விலக வேண் டும்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top