மார்ச் 1-ம் தேதி முதல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம்; படங்கள் வெளியாகாது

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தெலுங்கு தயாரிப்பாளர்கள் திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து இருந்தனர். இதை மற்ற மாநிலங்களின் திரை உலகத்தினரோடு சேர்ந்து செய்ய முடிவு எடுத்து.

இதுகுறித்து தெலுங்கு, மலையாளம், கன்னட மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சேர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையின் முடிவில் மார்ச் 1-ஆம் தேதி முதல் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள்தான் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிஜிட்டல் வடிவில் புரஜக்டர்களை நிறுவி வருகின்றன. கியூப், யுஎஃப்ஓ ஆகிய நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர் இரண்டு விதங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. ஒரு படத்தை திரையிட அதிக வசூலில் இந்த இரண்டு நிறுவனங்களும் செய்யப்பட்டு வருகின்றன.

இதே சமயத்தில் பிற நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு திரையிட 4,000 ரூபாயும், நீண்ட காலத்திற்கு 12,000 ரூபாய் கட்டணமாகப் பெறவும் தயாராக உள்ளன. ஆனால், கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள் மூன்று மடங்கு அதிக தொகையைக் கேட்கின்றன.

திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒளிபரப்புக் கட்டணத்தை அதிகமாக பெற்றுவருவதைக் கண்டித்தும், அந்த நிறுவனங்களின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்து திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையுலகினருக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடும், சிறிய முதலீட்டு படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்கும், பொருளாதார இழப்புக்கும் தீர்வு காணும் வகையிலும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் திரைப்படத்திற்கான டிக்கெட் விலைகளை அதிகரித்து இருக்கும் திரையரங்குகள் மற்றும் வாகனங்கள் நிறுத்த திரையரங்குகள் அதிகம் கட்டணம் வசூலிப்பது குறித்த பிரச்சனைகளும் விவாதிக்க படும் என்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top