பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு: மோடி பொதுக்கூட்டம் அருகே “பக்கோடா” விற்ற பட்டதாரி இளைஞர்கள் கைது

சமீபத்தில் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்து இருந்தார் அதில் அவர் கூறியதாவது, நாட்டில் வேலையின்மையைப் பற்றி பேசுகிறார்கள். இந்த சேனலுக்கு வெளியே நின்று இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்தால் கூட நாள் ஒன்றுக்கு ரூ. 200 சம்பாதிக்கலாம் என்று கூறி இருந்தார்.

நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை அதிகரித்து வருகிறது. இதற்கான திட்டங்கள் அரசால் முன்வைக்கப்படாமல் இருந்து வருகிறது. இது குறித்து பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இது தொடர்பாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பாஜக அலுவலகம் முன் படித்த இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு நகருக்கு நேற்று பிரதமர் மோடி பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருந்தார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார்.

அவரின் பேரணி நடக்க இருந்த பேலஸ் சாலை அருகே இளைஞர்கள் பலர் பட்டமளிப்பு ஆடையுடன், பக்கோடா விற்பனை செய்து மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மோடியின் வருகைக்கு சில மணிநேரங்கள் முன் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. சில மாணவர்கள் பட்டதாரி உடை அணிந்தபடி திரண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் இருந்த தட்டுகளில் உள்ள பக்கோடாவை விற்க ஆரம்பித்தனர்.

‘மோடி பக்கோடா’, ‘அமித்ஷா பக்கோடா’ மற்றும் ‘டாக்டர் யெட்டி பக்கோடா’ என கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதை அறிந்து அங்கு சென்ற போலீஸார் இளைஞர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top