மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து; கோயில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்: அரசுக்கு மதுரை கலெக்டர் அறிக்கை

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கலைநயம் மிக்க ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள வீர வசந்தராயர் மண்டப வளாகத் தில் அமைந்திருந்த 36 கடைகள் சேதமடைந்தன.

தீ விபத்துக்கான காரணங்களை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் கோயில் கட்டிடத்தின் உறுதித் தன்மையை மதிப்பிட தனிக்குழு அமைக்கப் பட்டுள்ளது. தீ விபத்து நடந்த பகுதியை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் மதுரை கலெக்டர் வீர ராகவராவ் ஒரு இடைக்கால அறிக்கையை, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார்.

மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 140 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீ விபத்து உள்ளிட்ட அசாதாரண சூழல் ஏற்பட்டால் அதற்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வசதிகள் செய்யப்படவில்லை.

கோயிலில் மிகக் குறுகிய இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வரும் உபகரணங்கள் இல்லை. பக்தர்களிடம் கெடுபிடி காட்டும் கோயில் நிர்வாகம் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஏற்கெனவே தீ விபத்துக்கு கோயில் நிர்வாகத்தின் மெத்தனப் போக்குதான் காரணம் என பல்வேறு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரின் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top