குற்றப் பத்திரிகை ஏன் இன்னும் எனக்கு கொடுக்கப்படவில்லை; முகிலன்

கூடங்குளம் வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சூழலியல் போராளி முகிலன் அவர்கள் நேற்று (02-02-2018) வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு காவல் துறையால் அழைத்து வரப்பட்டார்.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தும், கூடங்குளம் அணு உலை திட்டத்தை எதிர்த்தும் தமிழகத்தை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர்.

பின் சூழலியல் போராளி முகிலன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார், அதில் அவர் கூறியதாவது:-

நியூட்ரினோ திட்டம் ஏற்கனவே நிறுத்தப்பட்டு இருந்தது. மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு உரிமையை பறித்து நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துகிறது மத்திய அரசு, அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இது தமிழகத்தின் உரிமையை பரிக்கின்ற செயல்.

அதுமட்டும் அல்ல, 5 கோடியில் சூரிய மின்சார திட்டம் இருக்கும் போது 10 கோடியில் அனல் மின் திட்டத்தை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். இது இந்திய அரசின் கொள்ளைக்கான திட்டம். இப்படிப்பட்ட சட்ட விரோதமான செயலால் தமிழகத்தை பாலைவனம் ஆக்கும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும்.இதனால் தமிழகம் மிகப்பெரிய பிரளயத்தை சந்திக்க இருக்கிறது.

என்னுடைய வழக்கிற்கான கோப்புகளை கொடுத்துள்ளார்கள்.வழக்கு நடத்துவார்களா?என்று தெரியவில்லை. 138 நாட்களாக சிறையில் இருக்கிறேன். இன்று தான் சில வழக்கு விவரங்களை கொடுத்து இருக்கிறார்கள். இன்றுவரை எனக்கு குற்ற பத்திரிகை கொடுக்க படவில்லை. வழக்கை உடனடியாக நடத்தவேண்டும் என்று கேட்டு கொண்டு இருக்கிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விரோதமாக தமிழக அரசும் நீதி துறையும் செயல்பட்டு வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top