பா.ஜ.க அரசின் பட்ஜெட் தாக்கம் எதிரொலி: கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி

2018-2019ம் ஆண்டுகளுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.

காலை பட்ஜெட் தாக்களில் நீண்ட கால முதலீடு திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். காலையில் உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தை நிதி மந்திரி அறிவிப்புக்கு பிறகு மாலையில் மும்பை பங்குச்சந்தை சரிவை சந்தித்தது.

மேலும் நேற்று காலை முதலே மும்பை பங்குச்சந்தை சரிய தொடங்கியது. காலையில் சுமார் 600 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அதன்பின்னர் மாலையில் முடியும்போது 840 புள்ளிகள் சரிந்து 35,066 புள்ளிகளில் முடிவடைந்தது. அதுமட்டும் இன்றி தேசிய பங்குசந்தையும் சரிவை சந்தித்தது.

தேசிய பங்குச்சந்தையில் 190 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அது மாலை வரை தொடர்ந்தது. இதனால் வர்த்தகம் முடியும்போது, 256 புள்ளிகள் குறைந்து 10,760 புள்ளிகளில் முடிவடைந்தது.

வங்கி துறை பங்குகள் சுமார் 3.80 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. நிஃப்டி தனியார் வங்கி மற்றும் அரசு வங்கிகளிலும் அதன் துணை குறியீட்டு பங்குகளுடன் 2.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. ரியல் எஸ்டேட் பங்குகள் அதன் துறை துணை குறியீட்டு பங்குகளுடன் 6 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top