மத்திய அரசின் நிழல் அரசாக செயல்படும் எடப்பாடி அரசு விரைவில் அகற்றப்படும் – டி.டி.வி. தினகரன்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னை வெற்றிபெற்ற செய்த டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கடந்த மாதம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் செய்தார்.

இந்த நிலையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதால் தமிழகம் முழுவதும் தினகரன் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கி உள்ளார்.

இதன்படி ஆடுதுறை, திருவிடைமருதூர், திருபுவனம், திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், திருச்சேறை மற்றும் கும்பகோணத்தை அடுத்த உள்ள சோழபுரம் ஆகிய இடங்களில் டி.டி.வி.தினகரனின் மக்கள் சந்திப்பு பயணத்தில் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள் தி.மு.க. வையும், அ.தி.மு.க.வையும் புறக்கணித்து என்னக்கு வாக்குஅளித்து அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது மக்களுக்கு இருக்கும் பெரும் சுமையான பஸ்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்வோம்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டு சென்று காவிரி நடுவர் மன்றம் அமைத்து அதன் மூலம் சட்டப் போராட்டம் நடத்தி காவிரியில் நமக்கு உரிய தண்ணீரை பெற்று தந்தார். அதன் மூலம் ஆண்டுதோறும் நமக்கு தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது காவிரி டெல்டாவில் நெற்பயிர் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகிறது.

தற்போதுள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி நமக்கு உரிய தண்ணீரை கேட்டு பெறாமல், தண்ணீரை பெறுவதற்கு முயற்சிக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.

கதிராமங்கலம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

ஜெயலலிதா ஆட்சி இருந்தபோது இந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்தார். ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்தாரோ அந்த திட்டங்களை எல்லாம் மத்திய அரசிடம் பயந்து கொண்டு தற்போதைய தமிழக ஆட்சியாளர்கள் அனுமதித்துள்ளனர்.

மத்திய அரசிடம் அந்த உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு மத்திய அரசின் நிழல் அரசாக இந்த தமிழக அரசு செயல்படுகிறது.

ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. விரைவில் எடப்பாடி ஆட்சி அகற்றப்பட்டு ஜெயலலிதாவின் ஆட்சி கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top