பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைப்பு நாடகம்;மக்களை ஏமாற்றும் பாஜக பட்ஜெட்

 

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

நாட்டின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பை மாநகரில் 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.10 மற்றும் டீசல் ரூ.67.10 என்ற அளவுக்கு உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்து பேசியபோது, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைப்பை அறிவித்தார்.

* வணிகச் சின்னம் இல்லாத ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு உற்பத்தி வரி ரூ.6.48-ல் இருந்து ரூ.4.48 ஆக குறைக்கப்படுகிறது.

* வணிகச் சின்னம் கொண்ட ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு உற்பத்தி வரி ரூ.7.66-ல் இருந்து ரூ.5.66 ஆக குறைக்கப்படுகிறது.

* வணிகச் சின்னம் இல்லாத ஒரு லிட்டர் டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.8.33-ல் இருந்து ரூ.6.33 ஆக குறைக்கப்படுகிறது.

* வணிகச் சின்னம் கொண்ட ஒரு லிட்டர் டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.10.69-ல் இருந்து ரூ.8.69 ஆக குறைக்கப்படுகிறது.

* இவ்விரு எரிபொருட்கள் மீது லிட்டருக்கு ரூ.6  என்று விதிக்கப்பட்டு வந்த கூடுதல் உற்பத்தி வரி ஒழிக்கப்படுகிறது.

இதை பார்க்கிறபோது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.8 குறையும் என்பதுபோல தோன்றும். ஆனால் அப்படி விலை குறையாது.

இதற்கு காரணம், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு ரூ.8 புதிய சாலை வரியாக விதிக்கப்படுகிறது.

எனவே பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைந்தாலும், அதைப் பயனாளிகள் அனுபவிக்க முடியாதபடிக்கு அதே அளவுக்கு புதிதாக சாலை வரி விதிக்கப்பட்டு விட்டது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top