12 சதவிகித வேளாண் வளர்ச்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பில்லை; மன்மோகன் சிங்

 

பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில், எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.  அதில் 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும் என்று அருண்ஜெட்லி கூறியிருந்தார்.

 

பட்ஜெட் தாக்கல் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:

 

விவசாயிகளின் வருமானம் 2022 -க்குள்  இரட்டிப்பாக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் வேளாண் வளர்ச்சி 12 சதவீதமாக இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை.  நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது போல் தெரிகிறது.  மோடி அரசாங்கம் தனது வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றும் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top