நல்ல கதைகளை எப்படி தேர்வு செய்வேன் – விஜய் சேதுபதி விளக்கம்

ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. கவுதம் கார்த்தி, காயத்ரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை 7சி எண்டர்டையின்மன்ட் மற்றும் அம்மா நாராயணா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தை விளமபர படுத்துவதற்காக படக்குழு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் விஜய் சேத்துபதி கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘எப்படி வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

”மக்களை பலரும் பல வகையில் சாகடிக்கிறார்கள். நாம் திரையரங்கிற்கு அழைத்து வந்து மக்களை சாகடிக்கக் கூடாது என்று நினைத்தே கதைகளைத் தேர்வு செய்கிறேன். எப்போதுமே என் படத்தைப் பார்க்கும் மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பது என் எண்ணம்.

இயக்குநர் கதை சொல்ல வரும் போதே அவர் எப்படிப்பட்டவர், அவரது குணம் எப்படி என்று தெரிந்துகொள்வேன். யக்குநர் குணாதிசயங்கள் பிடிக்கவில்லையென்றால் அவரோடு பயணிப்பது கடினம்.

நல்ல நண்பர்கள் என்றாலும் கதை சரியில்லை, வேறு கதையிருந்தால் சொல்லுங்கள் என்றால் நேரடியாகச் சொல்லிவிடுவேன். நட்புக்காக கதைகள் தேர்வு செய்து, எந்தவொரு தயாரிப்பாளரும் பாதிக்கப்படக்கூடாது.

இத்தனை படங்கள் நடித்த அனுபவமும், ஓரளவுக்கு நல்ல கதைகள் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

நமக்கான நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படியோ, அப்படித்தான் கதைகளையும் தேர்ந்து எடுப்பேன். சினிமா என்பது மக்களுக்கானது” என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top