ஆர்.எஸ்.எஸ். தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்கள் இருந்து இருக்கிறீர்களா? ராகுல் காந்தி பாய்ச்சல்

மேகாலயா மாநிலம், தலைநகர் ஷில்லாங்கில் உள்ள புனித எட்மண்ட்ஸ் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அந்த நிகழியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

“மகாத்மா காந்தியின் படத்தை நீங்கள் பார்த்தீர்களேயானால், எப்போதும் பெண்களை இரு புறங்களிலும் மட்டுமின்றி பின்னாலும் பார்க்க முடியும். அதுவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் படத்தை பார்த்தீர்கள் என்றால் அவர் எப்போதும் தனிமையில் இருப்பார் அல்லது ஆண்கள் புடைசூழ இருப்பார்”

மோகன் பகவத் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். தற்போது இயங்கி வருகிறது, ஆனால் அவரை சுற்றி பெண்கள் இருப்பதுபோல பார்க்கவே முடியாது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தலைமைத்துவ பொறுப்புகளில் யாரேனும் பெண்கள் இருந்து அறிந்து இருக்கிறீர்களா? ஒருவரும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

தேவாலய பிரதிநிதிகள் மற்றும் பழங்குடியினர் செங் காசி மற்றும் பிற சிறுபான்மை குழுக்களின் தலைவர்கள் “சகிப்புத்தன்மை” குறித்து பெரிதும் கவலைப்படுகின்றனர் குறிப்பாக ஒரு உணவு பழக்கம், மொழி மற்றும் கலாச்சாரம் என்று திணிக்கப்படுவதை குறித்து பெரிதும் வருந்துவதாக காங்கிரஸ் தலைவர்களிடம் கூறினார்கள்.

இந்த நாடு பன்முகத்தன்மை கொண்டது இங்கு அனைவரும் தங்கள் கலாச்சாரத்தை பின்பற்ற உரிமை உண்டு, நாட்டை பாதுகாப்பது என்றல் உள்ளூர் நலன்களை பாதுகாக்கும் பொருட்பும் சேர்ந்ததே, தேசிய கட்சியின் இந்த உள்ளுணர்வு கொள்கையை மாற்ற முடியாது என்று, ” அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top