முதலாவது ஒரு நாள் போட்டி; கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

டெஸ்ட் தொடரை இழந்ததால் ஒரு நாள் போட்டி தொடரை வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் விளையாட இந்திய அணி உள்ளது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி ஒரு நாள் தொடரை ஒரு போதும் வென்றதில்லை. 1992-ல் 2-5 என்ற கணக்கிலும், 2006-ல் 0-4 என்ற கணக்கிலும், 2011-ல் 2-3 என்ற கணக்கிலும், 2013-ல் 0-2 என்ற கணக்கிலும் இந்திய அணி தோற்று இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட் போன்று ஆடுகளம் வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியாக மட்டும் இருக்காமல் இந்த முறை பேட்டிங்குக்கும் ஒத்துழைக்கும். அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் காயத்தால் விலகியது அந்த அணிக்கு சற்று பாதிப்பு தான். இருந்தாலும் மிகவும் சவாலான அணியாகவே தென் ஆப்பிரிக்கா அணி திகழ்கிறது.

ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் தற்போது தென்ஆப்பிரிக்கா 120 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி 5-2 என்ற நிலையில் தொடரை கைப்பற்றினால், மீண்டும் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே அல்லது மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா, முகமது ஷமி அல்லது ஷர்துல் தாகூர்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பிளிஸ்சிஸ் (கேப்டன்), மார்க்ராம், டேவிட் மில்லர், டுமினி, கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ரபடா, இம்ரான் தாஹிர், மோர்னே மோர்கல்.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top