மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் 12 அணைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து: வைகோ

 

மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்பபு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தேனி மாவட்டத்தில் பண்ணைபுரம், கோம்பை, சின்னமனூர், பொட்டிப்புரம், உத்தமபாளையம் உள்ளிட்ட ஊர்களில் பிரசாரம் செய்தார்.

நியூட்ரினோ திட்டத்தின் அழிவு கூறித்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச் சூழல் அனுமதியை அளிக்கவில்லை. மலையின் உச்சியில் இருந்து 1.50 கி.மீ ஆழத்தில் மூன்று பக்கங்களில் சுமார் 1 கி.மீ தூரத்துக்கு சுரங்கங்கள் அமைக்கவும் அதில் 50 ஆயிரம் டன் எடையுள்ள மேக்னடிக் கலோரி மீட்டர் எனப்படும் காந்தம் பொருத்தவும், இதற்காக வெடிமருந்து வைத்து 12 லட்சம் டன் மலைப்பாறைகளை தகர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதனால் பெரியாறு, இடுக்கி, வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை உள்ளிட்ட 12 அணைகள் பாதிக்கப்படும். நாளொன்றுக்கு 11 லட்சம் லிட்டர் தண்ணீரை சுருளியாறு மற்றும் முல்லை பெரியாற்றில் இருந்து எடுக்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டம் நிறைவேறினால் அணைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, தண்ணீர் இல்லாமல் விவசாயத்துக்கு பெரும் ஆபத்து நேரும். தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்படுவர்.

இந்த ஆய்வு மையத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி அளிக்க கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top