தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடிக்குமா?

வரும் பிப்ரவரி 1-ந் தேதி இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 6 ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடக்கருகிறது. இதற்கு முன் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா அணி.

இந்த ஒருநாள் தொடரை 4-2 என்ற கணக்கில் கைப்பற்றினால் இந்திய அணி ஐ.சி.சி. கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க முடியும்.

தற்போது ஐ.சி.சி. தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா 121 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 116-புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

இந்திய அணி 1-5 என்ற கணக்கில் தொடரை இழந்தால் 3-வது இடத்துக்கு பின்தங்கி விடும். தென் ஆப்பிரிக்காவை பொறுத்தவரை இந்த தொடரை சமன் செய்தாலே ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கும். இதன் காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையான இந்த ஒருநாள் தொடர் இந்தியாவிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 876 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) 872 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) 827 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சு தரவரிசையில் இம்ரான் தாகீர் (தென் ஆப்பிரிக்கா) 743 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், போல்ட் (நியூசிலாந்து) 729 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்திய வீரர் பும்ரா 728 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top