ஒரே டேக்கில், 4 நிமிட வசனத்தை பேசி படக்குழுவை மிரளவைத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’, ’69’, ‘சீதக்காதி’ மற்றும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்களில் மிக பிசியாக நடித்து வருகிறார்.

இதில் சமீபத்தில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவு பெரும் தருவாயில் உள்ளது.

அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. பிப்ரவரி 2ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகிவிட்டன. இப்படத்தின் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

படத்தில் விஜய் சேதுபதிக்கு நிறைய கெட்டப்கள் இருக்கும் என்று செய்தி வந்தது. ஆனால் அவை அனைத்துமே ஒரு பாடலுக்கான கெட்டப்புகள் மட்டுமே என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

தற்போது, படத்தின் முக்கியமான காட்சியின் ஒரு பகுதியாக 4 நிமிட நீளமான வசனத்தை ஒரே டேக்கில் விஜய் சேதுபதி பேசி அசத்தியுள்ளதாகவும், இந்த 4 நிமிட வசனம் முழுவதும் திரையரங்கில் கைத்தட்டல் நிச்சயம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் நீளமான வசனம் பேசி கைத்தட்டல் வாங்குவது தமிழ் சினிமாவில் புதிதில்லை, பராசக்தி படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிக நீளமான வசனம் பேசி மக்களின் கைதட்டுகளை பெற்றார் எது போல பல பேர் நீளமான வசங்களை பேசி கைதட்டல் வாங்கியிருப்பது புதிதில்லை என்றாலும் விஜய் சேதுபதி பேசியிருப்பதாகக் கூறப்படும் 4 நிமிட வசனம் அவருக்கு முதல் முறையாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top