காஷ்மீர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய ராணுவ அதிகாரி மீது கொலை வழக்கு

 

காஷ்மீரில் தங்கள் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் இறந்தார்கள்.காஸ்மீர் இளைஞர்களை சுட்ட ராணுவ மேஜர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார்.

 

காஷ்மீரில் சோபியான் மாவட்டம் கனோவ்போரா கிராமத்தில் பாதுகாப்பு படையினர் மக்களை தாக்கியதால் அவர்களுக்கு  எதிராக போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு இளைஞர்கள் பலியாயினர். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. தெற்கு காஷ்மீரில் ரயில் போக்குவரத்து நேற்று நிறுத்தப்பட்டது. இணையதள சேவையும் முடக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. ஸ்ரீநகரில் போலீஸார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் தீவிர கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் இந்திய ராணுவ வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், காயமடைந்த இந்திய ராணுவ அதிகாரி ஒருவரை கொல்லவும் முயற்சி நடந்ததால் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய ராணுவ குழுவின் மேஜர் ஆதித்யா மற்றும் குழுவினர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 336 (உயிருக்கு ஆபத்தை விளைவி்த்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். 20 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை தரவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் சம்பவம் தொடர்பாக மெகபூபா பேசியதாகவும் விரிவான அறிக்கை அளிக்கப்படும் என்று முதல்வரிடம் ராணுவ அமைச்சர் உறுதி அளித்ததாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top