அஜித்தின் விசுவாசம் தொடங்குகிறது

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த “விவேகம்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தது.

இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தனர். பின் அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதத்தில் “விசுவாசம்” படத்தின் அறிவிப்பு வெளியானது.

ஆனால் படப்பிடிப்பு எப்போது, நடிகை யார், இசையமைப்பாளர் யார் என்பது குறித்து அறியும் ஆவலில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், அவர்களது கேள்விக்கு பதில் விரைவில் கிடைக்கவிருக்கிறது. அதேபோல் `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பும் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித் இளமை வேடத்தில் நடிக இருக்கிறார் அதற்காக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 மாதங்கள் நடக்கும் படப்பிடிப்பு ஜூலையில் முடிகிறதாகவும், அதனைத் தொடர்ந்து படம் தீபாவளிக்கு ரலீசாவதில் படக்குழு உறுதியாக இருப்பதாகவும் படக்குழுக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top