வடகொரியாவுக்கு பொருளாதார ரீதியாக மேலும் அழுத்தம்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் தகவல்

வடகொரியா அணு ஆயுத சோதனையைக் கைவிடுவதற்காக அந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியாக மேலும் அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொரியா பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது பொருளாதார நலன்களுக்குகாக ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திவருகிறது. அமெரிக்காவின் இந்த அக்கிரபிப்புக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் உதவி புரிந்து வருகின்றன எதனால் கொரியா பிராந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நங்கள் அணு ஆயுத சோதனை மேற்கொள்கிறோம் என்று வடகொரியா தெரிவித்தது. இதைத்தொடர்ந்து வடகொரியா பல முறை அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவின் ஹோனோலுலு நகரில் பசிபிக் கமாண்ட் உள்ள ராணுவ படைத்தள தலைமையகத்தில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் மற்றும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் சாங் யூங்-மூ நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது மேட்டிஸ் கூறியதாவது:

தென்கொரியாவும் வடகொரியாவும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பங்கேற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதை வரவேற்கிறோம்.

அதேநேரம் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையை கைவிட வலியுறுத்தும் வகையில், சர்வதேச அளவில் வடகொரியாவுக்கு பொருளாதார ரீதியாக மேலும் அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான வடகொரிய அரசு உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தூதரக ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்போதைக்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top