சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருக்கும் 25 வீரர்களின் முழு விவரம்

2018 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது. டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்பே தக்க வைத்திருந்தது.

குறைந்தது 18 பேர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதால் 15 பேரை தேர்வு செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் கலந்து கொண்டது.

டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தவிர்த்து 22 பேரை ஏலம் எடுத்தது. இதில் 4 விக்கெட் கீப்பர்கள், 11 ஆல்ரவுண்டர்கள், 8 பந்து வீச்சாளர்கள், 2 பேட்ஸ்மேன்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக கேதர் ஜாதவை 7 கோடியோ 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை சென்னை அணி ஏலத்தில் எடுக்காமல் நேற்று தவறவிட்டது. இது அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. சென்னை அணி இதுவரை நட்டசத்திர வேகப்பந்து வீச்சாளர் என்று யாரையும் எடுக்கவில்லை. மிதவேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை 80 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.

சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

பேட்ஸ்மேன்கள்:-

1. முரளி விஜய் – ரூ. 2 கோடி
2. டு பிளிசிஸ் – ரூ. 1.6 கோடி

பந்து வீச்சாளர்கள்:-

3. கரண் சர்மா – ரூ. 5 கோடி
4. ஷர்துல் நரேந்திர தாகூர் – ரூ. 2.6 கோடி
5. ஹர்பஜன் சிங் – ரூ. 2 கோடி
6. மார்க் வுட் – ரூ. 1.5 கோடி.
7.இம்ரான் தாஹிர் – ரூ. 1 கோடி
8. லுங்கி நிகிடி – ரூ. 50 லட்சம்
9. கேஎம் ஆசிஃப் – ரூ. 40 லட்சம்
10. மோனு சிங் ரூ. 20 லட்சம்

விக்கெட் கீப்பர்கள்:-

11. மகேந்திர சிங் டோனி: – ரூ. 15 கோடி
12. அம்பதி ராயுடு – ரூ. 2.2 கோடி
13. சாம் பில்லிங்ஸ் – ரூ. 1 கோடி
14. என். ஜெகதீசன் – ரூ. 20 லட்சம்

ஆல்ரவுண்டர்கள்:-

15. சுரேஷ் ரெய்னா – ரூ. 11 கோடி
16. ஜடேஜா – ரூ. 7 கோடி
17. கேதார் ஜாதவ் – ரூ. 7.80 கோடி
18. வெய்ன் பிராவோ – ரூ. 6.40 கோடி
19. ஷேன் வாட்சன் – ரூ. 4 கோடி
20. கனிஷ்க் சேத் – ரூ. 20 லட்சம்
21. த்ருவ் ஷோரே – ரூ. 20 லட்சம்
22. சைத்தான்யா பிஷ்னாய் – ரூ. 20 லட்சம்
23. தீபக் சாஹர் – ரூ. 80 லட்சம்
24. மிட்செல் சான்ட்னெர் – ரூ. 50 லட்சம்
25. சிட்டிஸ் ஷர்மா – ரூ. 20 லட்சம்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top