கண் துடைப்புக்காக பஸ் கட்டணம் குறைப்பு; திட்டமிட்டபடி நாளை மறியல் போராட்டம் – மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது, இந்த கூட்டத்தில் தி.மு.க.வின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்று காலை பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதில் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்பட அனைவருமே பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினாலும் அரசு பெயர் அளவுக்கு கண் துடைப்புக்காக கட்டணத்தை குறைத்துள்ளதாக நாடகம் ஆடுகிறது.

தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் நாளை பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அளவில் ஏற்கனவே திட்டமிட்டப்படி மறியல் நடத்த இன்றைய கூட்டத்தில் முடிவு செய்து இருக்கிறோம்.

பஸ் கட்டண உயர்வுக்காக போராட்டம் நடத்தி சிறையில் உள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார். மாணவர்களை சேர்கையில் வைத்து இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கூறினார்.

உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இதை நாளைய போராட்டத்தில் வலியுறுத்த உள்ளோம்.அதன் பிறகு அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை 2 நாட்கள் பொறுத்து இருந்து பார்ப்போம். மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவு செய்வோம்.

இவரு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top